கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை

கோப்புப்படம்
பெருந்துறையில் கடந்த 2013ல் நடைபெற்ற கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 2013ல் நடைபெற்ற கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2013ல் ஹேமலதா - பாலாஜி ஆகியோர் கடத்தப்பட்ட வழக்கு கடந்த 12 ஆண்டுகளாக ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணையின் போது யுவராஜ் உள்ளிட்ட 3 பேருக்கும் எதிரான சாட்சிகள் அனைத்தும் பிறழ் சாட்சியாக மாறியதால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் கோவை மத்திய சிறைக்கு யுவராஜ் அழைத்துச் செல்லப்பட்டார்.
Related Tags :
Next Story






