சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியீடு

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியீடு
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 71,510 ஆக உள்ளது. சென்னையில் 22,374 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,569 பேர்

அண்ணா நகர் - 2,432 பேர்

தேனாம்பேட்டை-2,163 பேர்

ராயபுரம் மண்டலத்தில் - 1,964 பேர்

தண்டையார்பேட்டை-1,690 பேர்

திரு.வி.க. நகர்- 1,898 பேர்

அம்பத்தூரில் 1,221 பேர்

வளசரவாக்கத்தில் 1,148 பேர்

அடையாறு 1479 பேர்

திருவொற்றியூரில்-999 பேர்

ஆலந்தூர் - 951 பேர்

பெருங்குடி - 882 பேர்

மாதவரம்-829 பேர்

சோழிங்கநல்லூர்-522 பேர்

மணலியில் 496 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com