

சென்னை,
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் 12 ஆண்டுகளை கொண்டாடும் நிகழ்வில் கலந்து கொண்ட, மத்திய அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங் கூறும்போது. 'பி.எஸ்.எல்.வி. யைப் பொறுத்தவரை, இம்மாதம் (ஜூன்) இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம். நாட்டின் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தப்படுகிறது.
கொரோனா தொற்று காரணமாக, பயிற்சி பெற்று வந்த விண்வெளி வீரர்கள் ரஷியாவிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டதால், ககன்யான் திட்டம் தாமதமானது. ஆனால், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து சோதனை ராக்கெட்டுகளையும் முடிக்க முடியும் என்று நம்பப்படுகிறது' என்றார்.