

திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கள்ளக்காதலனான த.வெ.க.பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பாச்சல் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 30). திருப்பத்தூர் அருகே திப்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சிரஞ்சீவி என்பவரின் மனைவி மாலினி (31). இவர்கள் இருவரும் திருப்பத்தூர் மாவட்டம், தோரணம்பதி அடுத்த வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள வீட்டு மனைகள் பிரிவு பகுதிக்கு காரில் வந்தனர். அங்கு காரில் இருந்து இறங்கிய அவர்கள் இருவரையும் மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்ஷய் அனில் வாகரே, துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலை குற்ற வாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீ சார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட 2 பேரும் நெருங்கிய உறவினர்கள் என தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து மாலினியின் கணவர் சிரஞ்சீவியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவரது கள்ளக்காதல் பற்றி திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
திருவண்ணாமலையை சேர்ந்த மாலினிக்கும், திப்பசமுத்திரத்தை சேர்ந்த சிரஞ்சீவிக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மாலினி திருவண்ணாமலையில் பள்ளியில் படித்தபோது அதே பகுதியை சேர்ந்த சஞ்சீவ்காந்தி (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
திருமணத்திற்கு பிறகு மீண்டும் அவர்களுக்குள் தொடர்பு நீடித்துள்ளது. இதனை கணவர் சிரஞ்சீவி கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மாலினிக்கும் அவரது பள்ளிப்பருவ காதலன் சஞ்சீவ் காந்திக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதனால் மாலினி, சஞ்சீவ்காந்தியுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், சஞ்சீவ்காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலினியின் செல்போனை வாங்கி பார்த் தபோது அவர் அவரது நெருங்கிய உறவினரான ரஞ்சித்குமாருடன் கள்ளத்தொடர்பில் இருப்பது தெரியவந்தது. இதனால் மாலினியிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த 2 நாட்களாக சஞ்சீவ்காந்தி போன் செய்தபோது மாலினி போனை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சஞ்சீவ்காந்தி தனது மோட்டார் சைக்கிளில் மாலினியை சந்திக்க திப்பசமுத்திரம் வந்துள்ளார். அப்போது மாலினி, இன்னொரு கள்ளக்காதலனான ரஞ்சித்குமாருடன் ஒன்றாக காரில் சென்று கொண்டு இருந்ததை பார்த்துள்ளார்.
இதனால் ஆவேசம் அடைந்த சஞ்சீவ்காந்தி பயங்கர கோபத்துடன் மாலினி சென்ற காரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். கார் திருப்பத்தூர் அருகே தோரணம்பதி பகுதியில் உள்ள தனியார் வீட்டுமனை பகுதிக்கு சென்று நின்றது. அங்கு சென்ற சஞ்சீவ்காந்தி, ரஞ்சித்குமாரை முதலில் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பியோட முயன்ற மாலினியை துடிக்க துடிக்க வெட்டி கொலை செய் தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சஞ்சீவ்காந்தியை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் திருவண்ணாம லைக்கு சென்று சஞ்சீவ்காந்தியை கைது செய்து விசாரணைக் காக திருப்பத்தூருக்கு அழைத்து வந்தனர். இரட்டைக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சீவ்காந்தி தமிழக வெற்றிக்கழக பிரமுகர் ஆவார்.
போலீசார் இந்த சம்பவம் பற்றி கூறும்போது, சஞ்சீவ்காந்திக்கும், மாலினிக்கும் நெருங்கிய உறவினரான ரஞ்சித்குமார் அடிக்கடி திப்பசமுத்திரம் கிராமத்திற்கு வருவார். இவர் மாலினிக்கு தம்பி உறவு முறை ஆவார். ரஞ்சித்குமார் அடிக்கடி மாலினி வீட்டிற்கு வந்து பேசி செல்வார். இருவரும் அக்காள் -தம்பி உறவு முறை என்பதால் யாரும் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது நாளடைவில் ரஞ்சித்குமாருக்கும், மாலினிக்கும் இடையே கள்ளத்தொடர்பாக மாறியது.
ரஞ்சித்குமார் டிரைவராக உள்ளதால் காரில் திப்பசமுத்திரம் வந்து மாலினியை அழைத்து சென்று பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் யாருக்கும் தெரியவில்லை. மாலினி, சஞ்சீவ்காந்தியுடன் உள்ள தொடர்பை குறைக்கவே அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மாலினியிடம் தகராறு செய்துள்ளார்.
தொடர்ந்து அவரது செல்போன் மூலம் ரஞ்சித்குமாரிடம் மாலினி கள்ளத்தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதனால் ஆவேசமடைந்த சஞ்சீவ்காந்தி சம்பவத்தன்று இருவரும் ஒன்றாக காரில் செல்வதை பார்த்ததும் தனது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்று 2 பேரையும் வெட்டிக்கொலை செய்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.