"இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்" - திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலை கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
"இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்" - திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு
Published on

திருவாரூர்,

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலை கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

கொரோனா காரணமாக தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த உத்தரவு திரும்பப்பெறப்படுவதாக கூறப்பட்டுள்ளது, அதேபோல அவர்கள் வெற்றி பெறாத பாடங்களுக்கான அரியர் தேர்வுகளும் நடைபெறும் என திருவாரூர் மத்திய பல்கலைக்கழக அறிவித்துள்ளது.

மேலும் பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவு காரணமாக தேர்வு நடத்தப்படுவதாகவும், ஆன்லைன் முறையில் தேர்வுகள் எழுத முடியாத மாணவர்கள், சகஜ நிலை திரும்பியபின் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் தேர்வுகளை எழுதி கொள்ளலாம் என்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com