ஒக்கேனக்கல் ஆற்றில் நீர் வரத்து மீண்டும் அதிகரிப்பு

மேட்டூர் அணையிலும் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீர் 2 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது
ஒக்கேனக்கல்
Published on

கர்நாடகா, கேரளம் உள்பட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. அதன்பிறகு நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கனஅடியானது.

இந்த நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால், காவிரியில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரியில் 4.500 கன அடியில் இருந்து 7,000 கன அடியாக நீர் வரத்து உயர்ந்துள்ளது. 3 நாட்களாக நீர் வரத்து சரிந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது விவசாயிகளுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. மேட்டூர் அணையிலும் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீர் 2 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 81.3 அடியாக உயர்ந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com