சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா - முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பு..?

இந்திய அரசியலில் வருகை என வாழ்க்கையின் அனுபவங்கள் அனைத்தும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா - முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பு..?
Published on: 

சென்னை,

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தனது சுயசரிதையை 'பிலாங் கிங்: எ ஜர்னி ஆப் லவ்' என்ற பெயரில் எழுதி உள்ளார். அந்த புத்தகத்தில், சோனியா காந்தியின் குழந்தைப் பருவம், இளமைப் பருவ காதல், படிப்பு, ராஜீவ காந்தி படுகொலை, இந்திய அரசியலில் வருகை என வாழ்க்கையின் அனுபவங்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன.

அந்த புத்தகம் கடந்த 10-ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள கடைகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழா, டெல்லியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வரும் 16-ம் தேதி நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் 16-ந்தேதி டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

X