தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக,தென்மேற்கு பருவமழை அந்தமான் கடற்பகுதியில் தொடங்க சாதகமான சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. பொதுவாக கத்திரி வெயில் காலம் கோடை காலத்தின் உச்சமாக பார்க்கப்படும். இந்த கால கட்டங்களில் வெப்பம் பெருமளவில் அதிகரிக்கும்.

அதன்படி, கத்திரி வெயில் தொடங்கிய பிறகு மேலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்குமோ? என்று பேசப்பட்டது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் வெப்பம் குறைந்தே காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது இலங்கையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக,தென்மேற்கு பருவமழை அந்தமான் கடற்பகுதியில் தொடங்க சாதகமான சூழல் உருவாகியுள்ளது, இது தமிழகத்தின் மழைப்பொழிவை அதிகரிக்கும்.

இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை மாவட்டங்கள்:

• நீலகிரி

• ஈரோடு

• தருமபுரி

• கிருஷ்ணகிரி

• திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்யக்கூடும்.

இந்த மழையால் வெப்பம் குறைந்து காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com