

சென்னை,
தமிழக அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“திரவநிலை பெட்ரோலிய எரிவாயு (LPG) விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாக, வணிக மற்றும் தொழிற்துறை LPG ஒதுக்கீட்டை முதலில் 20% அளவிற்கு மத்திய அரசு குறைத்தது. தற்போது, இந்த ஒதுக்கீட்டை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 50% அளவிற்கு உயர்த்தியுள்ளது.
இந்த ஒட்டுமொத்த 50% ஒதுக்கீட்டில் இருந்து LPG ஒதுக்கீடு பெற தகுதி பெற வேண்டுமாயின், அனைத்து வணிக மற்றும் தொழிற்துறை LPG நுகர்வோர் சம்பந்தப்பட்ட எண்ணெய் விற்பனை நிறுவனங்களிடம் (Oil Marketing Companies) பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மேலும், மேற்படி LPG நுகர்வோர், தங்கள் மாவட்டங்களில் உள்ள நகர எரிவாயு விநியோக நிறுவனங்களிடம் PNG இணைப்புக்கு விண்ணப்பித்து, தாங்கள் PNG பெறுவதற்கு தயார் நிலையில் உள்ளதை உறுதிபடுத்த வேண்டும்.
குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்புகளைப் பெற ஆர்வமுள்ள வணிக மற்றும் தொழில்துறை LPG நுகர்வோர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நகர எரிவாயு விநியோக CGD நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளலாம்:
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: KSR பிரசாத், நிர்வாக இயக்குனர், Torrent Gas Chennai Pvt Ltd, CGD Network மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் - தொடர்பு எண்: +91 63574 69742”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.