பாளையங்கோட்டையில் மின்னணு எந்திரம் பழுதால் வாக்குபதிவு தாமதம்

வாக்கு எந்திரம் பழுதால் வாக்களிக்க வந்த பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
பாளையங்கோட்டையில் மின்னணு எந்திரம் பழுதால் வாக்குபதிவு தாமதம்
Published on

பாளையங்கோட்டை

தமிழக சட்டசபைக்கு ஒரேகட்டமாக இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ரோஸ்மேரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்கு எந்திரம் பழுதால் இன்னும் வாக்குப்பதிவு தொடங்காமல் இருக்கிறது. இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் பின்பு அவர்கள் வந்து வாக்கு எந்திரத்தை சரி செய்து வருகின்றனர். இதனால் அந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com