

புதுடெல்லி,
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பட்ஜெட் தொகையில் பெரும்பகுதி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிட்ட சதவீதமாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் 26 நாட்கள் கழித்து, அதாவது பிப்ரவரி 27-ந் தேதி, புதுப்பிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி வரிசை வெளியிடப்படும். அப்படியானால் பட்ஜெட் தொகை மாற்றம் செய்யப்படுமா? மொத்த விலை குறியீட்டு எண்ணும் மாற்றத்துக்கு உள்ளாகும். கொள்கை உருவாக்குவதில் ஒருங்கிணைப்பு இல்லாததையே இது காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.