

கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பாரக்பூரில் பா.ஜனதா ஊழியர்கள் கூட்டம் நடந்தது. அதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-
விரைவில் நடக்கும் மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு போவது நிச்சயம். இங்கு பா.ஜனதா அரசு அமைப்பது மாநிலத்துக்கு மட்டுமின்றி, தேச பாதுகாப்புக்கும் நல்லது.
மேற்கு வங்காளத்தில் ஊடுருவல் நடக்கும் விதம், ஒட்டுமொத்த நாட்டுக்கும் பாதுகாப்பு பிரச்சினை ஆகிவிட்டது. வாக்கு வங்கிக்காக ஊடுருவல்காரர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் அரசு அடைக்கலம் அளிக்கிறது.
கோர்ட்டு உத்தரவிட்டும் கூட வேலி அமைக்க எல்லை பாதுகாப்பு படைக்கு நிலம் அளிக்கவில்லை. போலி ஆவணங்களுடன் எல்லை தாண்டி வரும் ஊடுருவல்காரர்களை நிர்வாகமோ, போலீசோ தடுக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.