

சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளையும் தூய்மையாக வைத்திருக்கும் வகையில் தூய்மைக்காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் வீடுதோறும் திடக்கழிவுகளை சேகரித்து தரம் பிரித்து வருகின்றனர்.
கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக்காவலர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தூய்மைக்காவலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மைக்காவலர்களுக்கான மதிப்பூதியத்தை ரூ. 5 ஆயிரத்தில் இருந்து ரூ. 6 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ. 417 கோடி கூடுதல் நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.