கேரளாவில் பரபரப்பு சம்பவம்: பள்ளிக்கு சுடிதார் அணிந்து வந்த தலைமை ஆசிரியை.. காவலாளி செய்த செயல்

சுடிதார் அணிந்து வந்தால் ஆசிரியைக்கு அனுமதி கிடையாது என மேலாளர் உத்தரவு பிறப்பித்ததாக காவலாளி கூறினார்.
கேரளாவில் பரபரப்பு சம்பவம்: பள்ளிக்கு சுடிதார் அணிந்து வந்த தலைமை ஆசிரியை.. காவலாளி செய்த செயல்
Published on

திருவனந்தபுரம்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரையில் ஒரு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சிந்து என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் சுடிதார் அணிந்து பள்ளிக்கு வந்தார். அப்போது அவரை காவலாளி பள்ளிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி கேட்டை மூடியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியை போராட்டத்தில் ஈடுபட்டார். அத்துடன் போலீசுக்கு தகவல் கூறினார்.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காவலாளியிடம் விசாரணை நடத்தினர். அப்போது. சுடிதார் அணிந்து வந்தால் ஆசிரியைக்கு அனுமதி கிடையாது என மேலாளர் உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில், சுடிதார் அணிந்த தலைமை ஆசிரியையை  தடுத்து நிறுத்தி கேட்டை மூடியதாக கூறினார். இதனை தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து தலைமை ஆசிரியை பள்ளிக்குள் செல்ல அனுமதித்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து மேலாளர் கூறுகையில் ‘தலைமை ஆசிரியையை பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது என நான் கூறவில்லை' என்றார்.

ஆசிரியைகள் தங்களது வசதிக்கு ஏற்ப பள்ளிக்கு சுடிதார் அணிந்து வர தடையில்லை என 2021-ம் ஆண்டு உயர் கல்வித்துறை ஆணை பிறப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி காவலாளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com