மாம்பழம் சின்னம் விவகாரம்: டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணை

தேர்தல் கமிஷன் கடிதத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மாம்பழம் சின்னம் விவகாரம்: டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணை
Published on

சென்னை,

பா.ம.க. யாருக்கு? என்று டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், வரும் தேர்தலில் மாம்பழம் சின்னத்தை ஒதுக்கி, அன்புமணி ராமதாஸ் முகவரிக்கு தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், ‘அன்புமணியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு மே மாதமே முடிந்து விட்டது. ஆனால், பா.ம.க. தலைவர் என்று போலி ஆவணங்களை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அன்புமணிக்கு தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியிருக்க கூடாது. சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக எனக்குதான் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும்.

எனவே, அன்புமணிக்கு அனுப்பிய கடிதத்தை ரத்து செய்ய வேண்டும். என் முகவரிக்கு கடிதத்தை அனுப்ப தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் முன்பு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com