ராணிப்பேட்டை: டாடா கார் உற்பத்தி ஆலையில் தயாரான முதல் கார் - கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்த ஆலையின் மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.
ராணிப்பேட்டை: டாடா கார் உற்பத்தி ஆலையில் தயாரான முதல் கார் - கொடியசைத்து தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா பனப்பாக்கத்தில் 1,231 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் குழுமம், 5 ஆண்டுகளில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, இந்த தொழிற்சாலையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை டாடா நிறுவனம் மேற்கொண்டது.

அந்த தொழிற்சாலைக்கு 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.9,000 கோடி முதலீட்டில், 470 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலையின் மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக 900 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கார் உற்பத்தி ஆலையின் முதல் அலகு இன்று திறந்து வைக்கப்பட்டது. டாடா கார் உற்பத்தி ஆலையின் முதல் அலகை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து டாடா கார் உற்பத்தி ஆலையில் முதல் அலகில் உற்பத்தியான முதல் ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு காரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகர், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com