

சேலம்,
கரூர் வீரராக்கியம் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில்வே பாலங்களை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை யொட்டி பாலக்காடு-திருச்சி எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை-சேலம் எக்ஸ்பி ரஸ், சேலம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் சேவை 3 நாட்கள் பாதி அளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் (வண்டி எண்- 16844) பாலக்காடு டவுன் திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 10, 13-ந் தேதிகளில் கரூர் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மேலும் பணிகள் முடிந்த பிறகு அந்த ரெயில் கரூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவற்ற சிறப்பு ரெயிலாக இயக்கப்படும்.
மயிலாடுதுறை-சேலம் எக்ஸ்பிரஸ்
அதேபோல் மயிலாடுதுறையில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16811) இன்று மற்றும் 10, 13-ந் தேதிகளில் வீரராக்கியம் ரெயில் நிலையத்துடன் நிறுத் தப்படும். அந்த ரெயில் மயிலாடுதுறையில் இருந்து வீரராக்கியம் வரை மட்டுமே இயக்கப்படும். வீரராக்கியத்தில் இருந்து சேலம் வரை இயக்கப் படாது.
மேலும் சேலத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்படும் சேலம்-மயி லாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்- 16812) இன்று மற்றும் 10, 13-ந் தேதிகளில் சேலத்திற்கு பதிலாக கரூர் சந்திப்பில் இருந்து மதியம் 3.40 மணிக்கு புறப்படும். அந்த ரெயில் சேலத்தில் இருந்து கரூர் வரை இயக்கப்படாது. அந்த நாட்களில் கரூரில் இருந்து புறப்பட்டு மயிலாடு துறை வரை இயக்கப்படும். எனவே, ரெயில் சேவைகளின் பாதிப்புக்கு பயணிகள் ஒத்துழைப்பு கொடுக்குமாறு சேலம் ரெயில்வே கோட்ட அலுவ லகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.