தங்க நகைகள் வாங்குபவர்களை அதிர்ச்சியடைய வைத்த விலை...இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,040 அதிகரித்துள்ளது.
தங்க நகைகள் வாங்குபவர்களை அதிர்ச்சியடைய வைத்த விலை...இன்றைய நிலவரம் என்ன?
Published on

சென்னை,

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. கடந்த 29-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.16,800 ஆக அதிகரித்திருந்தது. அதன்பின் விலை இறங்குவதும், ஏறுவதுமாக இருந்தது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.13 ஆயிரத்து 950-க்கு விற்றது.

கடந்த ஓரிரு நாட்களாக விலை குறைந்திருந்த நிலையில், தங்கத்தின் விலை நேற்று மீண்டும் உயர்ந்தது. ஒரு கிராமுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.14 ஆயிரத்து 270-க்கு விற்றது. பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 560 அதிகரித்தது. ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-ல் இருந்து, ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 160 ஆக உயர்ந்தது.

இந்தநிலையில் சென்னையில், தங்கம் விலை பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1.19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ரூ.14,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்வு

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.320க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.20,000 உயர்ந்து ரூ.3,20,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com