

புதுடெல்லி,
மத்திய அரசில் ஐ.ஜி. மற்றும் அதற்கு சமமான அந்தஸ்து கொண்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு மத்திய அயற்பணியில் 2 ஆண்டுகள் போலீஸ் சூப்பிரண்டு அல்லது டி.ஐ.ஜி. அந்தஸ்தில் பணியாற்றுவது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2011-ம் ஆண்டு பேட்ச் மற்றும் அதற்கு பிந்தைய பேட்ச் போலீஸ் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளுக்கு மத்திய அரசில் கீழ்மட்டத்தில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஏற்கனவே இதுபோன்ற நிபந்தனை உள்ளது.