Budget 2026 Live Updates... மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

Budget 2026 Live Updates... மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

நாட்டின் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதாக நிதி மந்திரி கூறினார்.

மத்திய பட்ஜெட்: பிரதமர் மோடிக்கு நிர்மலா சீதாராமன் பாராட்டு

2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்தார். பிரதமர் மோடி, சொல்லாட்சியை விட சீர்திருத்தத்தையும் தேர்ந்தெடுத்துள்ளதாகாவும், ஆத்மநிர்பர்தம் இந்தியாவின் நட்சத்திரம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதனிடையே, ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், 2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பஜெட்டை தாக்கல் செய்தார். பொதுவாக ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றம் விடுமுறை தினமாகும். ஆனால் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) பட்ஜெட் தாக்கல் என்பதால் நாடாளுமன்றம் செயல்பட்டு வருகிறது. 27 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம்: மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் 

நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளநிலையில், பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மத்திய மந்திரிசபை கூட்டத்தில், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பட்ஜெட் தாக்கல்: மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில் தற்போது 2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய நாடாளுமன்றமத்திற்கு வருகை தந்துள்ளார்.

பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிர்மலா சீதாராமனுக்கு ஜனாதிபதி வாழ்த்து

2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனிடையே நிர்மலா சீதாராமனுக்கு, திரவுபதி முர்மு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார்.

முன்னதாக ஜனாதிபதி மாளிகையில் திரவுபதி முர்முவை சந்தித்து நிர்மலா சீதாராமன் ஆசிபெற்றதுடன், பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து அவரிடம் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் உரையுடன் ஜனாதிபதி மாளிகைக்கு புறப்பட்டார் நிர்மலா சீதாராமன்

2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் உரையுடன் ஜனாதிபதி மாளிகைக்கு மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் புறப்பட்டார்.

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்

டெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதனிடையே, ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், 2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பொதுவாக ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றம் விடுமுறை தினமாகும். ஆனால் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) பட்ஜெட் தாக்கல் என்பதால் நாடாளுமன்றம் செயல்பட உள்ளது. 27 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

மத்திய பட்ஜெட்டில் தொழில் வளர்ச்சி, முதலீட்டு, வர்த்தகம், தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் விலக்கு, ஜிஎஸ்டி, வளர்ச்சி திட்டங்கள், ரெயில்வே திட்டங்கள் உள்பட பல்வேறு அறிவிப்புகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய யூனியன் - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில் வர்த்தகத்தை ஊக்குவிக்க சிறப்பு சலுகைகளும் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம், கேரளா உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பட்ஜெட்டில் அந்த மாநிலங்களுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Dailythanthi
www.dailythanthi.com