அரேபிய கடலில் பரபரப்பு: அமெரிக்கப் போர்க்கப்பலை நெருங்கிய ஈரான் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

ஈரான் எல்லையிலிருந்து சுமார் 800 கி.மீ தொலைவில் அமெரிக்கக் கப்பல் இருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரேபிய கடலில் பரபரப்பு: அமெரிக்கப் போர்க்கப்பலை நெருங்கிய ஈரான் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது
Published on

வாஷிங்டன்,

அரபிக் கடலின் சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்காவின் 'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' விமானம் தாங்கிக் கப்பலை நோக்கி அச்சுறுத்தும் வகையில் வந்த ஈரானின் ஷாஹித்-139 ட்ரோனை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளது. பலமுறை எச்சரித்தும் அந்த ட்ரோன் கப்பலை நோக்கி வேகமாக வந்ததால், தற்காப்பு நடவடிக்கையாக இந்த அதிரடி எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் எல்லையிலிருந்து சுமார் 800 கி.மீ தொலைவில் அமெரிக்கக் கப்பல் இருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது என்றும் கப்பலிலிருந்து ஏவப்பட்ட அதிநவீன எப்-35சி போர் விமானம், அந்த ட்ரோனை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியது என்றும் இந்தச் சம்பவத்தில் அமெரிக்க வீரர்கள் எவருக்கும் காயமோ அல்லது உபகரணங்களுக்குச் சேதமோ ஏற்படவில்லை எனவும் பென்டகன் உறுதிப்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com