மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள் இடம்பெறுமா? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

மத்திய பட்ஜெட் இன்னும் சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள் இடம்பெறுமா? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
Published on

சென்னை,

மத்திய பட்ஜெட் இன்னும் சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள் இடம்பெறுமா? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

மத்திய பட்ஜெட் 2026: வழக்கமாகச் சொல்லும் திருக்குறளோடு சேர்த்து, தேர்தலை மனதில் வைத்தேனும் தமிழ்நாட்டுக்கான பின்வரும் அறிவிப்புகள் இடம்பெறுமா?

* விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான ரூ. 3,548 கோடி ரூபாய் கல்வி நிதி

* கோவை, மதுரை மெட்ரோ இரயில்,

* தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் #JalJeevan (ஜல் ஜீவன்) திட்டத்துக்கான ரூ. 3,112 கோடி ரூபாய் நிதி

* புதிய ரெயில்வே திட்டங்கள்,

* நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு.

இன்னும் பட்டியல் இருக்கிறது. தேர்தலை மனதில் வைத்தாவது இம்முறை தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளைத் தவறாமல் வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். அவை மதுரை எய்ம்ஸ் #AIIMS போல அறிவிப்போடு நின்றுபோகாமல், முறையான நிதி ஒதுக்கீட்டுடன் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோருகிறோம்.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com