தமிழகத்தில் 4 இடங்களில் இன்று வெயில் சதம்

அதிகபட்சமாக ஈரோட்டில் 104° பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி கடைசியில் இருந்தே வெயில் உக்கிரம் காட்ட தொடங்கிவிட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது கோடை காலம் தொடங்கி வறுத்தெடுத்து வருகிறது. எல்நினோ தாக்கத்தால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மார்ச் முதல் வாரத்திலேயே தமிழ்நாட்டில் சில இடங்களில் வெயில் 100 டிகிரியை தொட ஆரம்பித்துவிட்டது. வழக்கமாக வெயில் உக்கிரம் காட்டும் இடமான வேலூரில்தான் இந்த ஆண்டும் வெயில் முதலில் 100 டிகிரியை தொட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது உள் மாவட்டங்களிலும் வெப்பம் வாட்டி வதைக்க ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 104° பாரன்ஹீட் (40° செல்சியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் வெயில் சதமடித்த இடங்களின் விவரம் வருமாறு:-

கரூர் பரமத்தி - 103.1° பாரன்ஹீட் (39.5° செல்சியஸ்)

திருப்பத்தூர் - 101.12° பாரன்ஹீட் (38.4° செல்சியஸ்)

வேலூர் - 101.12° பாரன்ஹீட் (38.4° செல்சியஸ்)

X

Daily Thanthi
www.dailythanthi.com