தமிழகத்தில் 9 இடங்களில் இன்று வெயில் சதம்

அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 105.26° பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் 9 இடங்களில் இன்று 100° பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-

சென்னை மீனம்பாக்கம் - 105.26° பாரன்ஹீட் (40.7° செல்சியஸ்)

சென்னை நுங்கம்பாக்கம் - 104.72° பாரன்ஹீட் (40.4° செல்சியஸ்)

கடலூர் - 103.28° பாரன்ஹீட் (39.6° செல்சியஸ்)

வேலூர் - 101.66° பாரன்ஹீட் (38.7° செல்சியஸ்)

மதுரை நகரம் - 101.48° பாரன்ஹீட் (38.6° செல்சியஸ்)

பரங்கிப்பேட்டை - 101.48° பாரன்ஹீட் (38.6° செல்சியஸ்)

தொண்டி - 101.12° பாரன்ஹீட் (38.4° செல்சியஸ்)

திருத்தணி - 100.76° பாரன்ஹீட் (38.2° செல்சியஸ்)

தஞ்சாவூர் - 100.4° பாரன்ஹீட் (38.0° செல்சியஸ்)

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com