வங்கக் கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது - வானிலை மையம் தகவல்

வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்கரையையொட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது.
வங்கக் கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது - வானிலை மையம் தகவல்
Published on

சென்னை,

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக நேற்றைய தினம் வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

இந்த நிலையில், வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடற்கரையையொட்டி நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரா அருகே நாளை அதிகாலை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com