

சென்னை,
இன்று 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வேகமெடுத்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள் டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சனிக்கிழமை இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இன்று 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்த நிலையில், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கககடல் பகுதியில் 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தாய்லாந்து வளைகுடா மற்றும் மியான்மரில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த வழிமண்டல கீழடுக்கு சுழற்சி, நாளை காலைக்குள் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் தக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதன் தாக்கத்தால் மத்திய வங்கக்கடல் பகுதியில் 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், புதிதாக உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகரக்கூடும் எனவும், இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன் வலுவை பொறுத்து அது புயலாக வலுப்பெறுமா? என்பது குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகளில் தகவல் வெளியிடப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.