வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம்

தென்மேற்கு பருவமழை தொடங்கிய பின் உருவாகும் முதல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இதுவாகும்.

தென்மேற்கு பருவமழை
Published on

புதுடெல்லி,

தெற்கு குஜ​ராத்​தில் இருந்து கர்​நாடகா வரை சராசரி கடல் மட்​டத்​தில் ஒரு காற்​றழுத்த தாழ்​வுப் பாதை நில​வு​கிறது. வடக்கு வங்​கக்​கடல் பகு​தி​கள், அதை ஒட்​டிய தெற்கு வங்​கதேசப் பகு​தி​களின் மேல் சுமார் 1.5 கிமீ உயரத்​தில் இருந்து 7.6 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நில​வு​கிறது.

இதன் காரண​மாக, வங்கக் கடலில் வடக்கு ஒடிஷா கடற்கரையை ஒட்டி உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி. இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழ்நாட்டில் கனமழைக்கான வாய்ப்பு குறைவு தான்.

தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழை தொடரும். தென்மேற்கு பருவமழை தொடங்கிய பின் உருவாகும் முதல் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இதுவாகும். புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2-3 நாட்களில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com