இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இரவு 10 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (14.01.2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com