இரவு 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரவு 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை ,

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கல் தென்காசி, தேனி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம் , விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com