15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை
Published on

சென்னை,

இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்

அதன்படி கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, நாகப்பட்டினம், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com