18 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
18 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

சவுராஷ்டிரா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன் தினம் அரபிக்கடல் பகுதிகளுக்கு நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன் தினம் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை சக்தி புயலாக வலுப்பெற்று குஜராத்தின் துவாரகாவில் இருந்து மேற்கு - தென்மேற்கே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் நிலைப்பெற்றுள்ளது.

இந்த சக்தி புயல் அடுத்த 24 மணிநேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் சற்று நகர்ந்து பிறகு மேற்கு - தென்மேற்கே நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.

அது நாளை வரை மேற்கு - தென்மேற்கே மேலும் நகர்ந்து வடக்க்கு அரப்பிக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com