காலை 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது
காலை 10 மணி வரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது

இந்நிலையில், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com