அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (11.03.2025) தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இரவு 7 மணிவரை சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

சென்னை,

திருவள்ளூர்,

செங்கல்பட்டு,

காஞ்சிபுரம்,

திருவண்ணாமலை,

கடலூர்,

விழுப்புரம்,

தஞ்சாவூர்,

திருவாரூர்,

நாகப்பட்டினம்,

மயிலாடுதுறை,

ராமநாதபுரம்.

[புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள்]

மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

ராணிப்பேட்டை,

கள்ளக்குறிச்சி,

சேலம்,

கரூர்,

புதுக்கோட்டை,

சிவகங்கை,

விருதுநகர்,

கன்னியாகுமரி,

திருநெல்வேலி,

தூத்துக்குடி,

தென்காசி.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com