

சென்னை,
இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சென்னை, செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தென்காசி, விழுப்புரம், கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், தேனி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.