கோப்புப்படம்
கோப்புப்படம்

5 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

சென்னை,

மன்னார் வளைகுடா முதல் தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடிமின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Also Read
பாகிஸ்தானின் கராச்சியில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை - 19 பேர் உயிரிழப்பு
கோப்புப்படம்

இந்த நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read
பெண் ஊழியர்கள் பிரசவ விடுப்பு விவகாரம் - தமிழக அரசின் விதிகளில் திருத்தம்
கோப்புப்படம்
X

Daily Thanthi
www.dailythanthi.com