சென்னையில் இரவு 9 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
 9 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை
Published on

சென்னை,

சென்னையில் இரவு 9 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய-கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மத்திய மற்றும் அதனையொட்டிய மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். அது நாளை (22-ந்தேதி) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும். வருகிற 23-ந்தேதி காலை அது வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா கடற்கரை பகுதியை நெருங்கும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இந்தநிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 9 மனிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் இரவு 9 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை எழும்பூர், சேத்பட், நுங்கம்பாக்கம் கோடம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, கோயம்பேடு, விருகம்பாக்கம், திருமங்கலம், அண்ணாநகர், சூளைமேடு, வடபழனி, வளசரவாக்கம், போரூர், மதுரவாயல், குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், பூந்தமல்லி, மேடவாக்கம், கீழ்கட்டளை, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதாக சென்னையின் முக்கியமான சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக காணப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com