தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. ஆங்கில புத்தாண்டு பிறப்பு மழையுடன் தொடங்கியது. சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. சென்னை பெரம்பூரில் 11 செ.மீட்டரும், எண்ணூரில் 10 செ.மீட்டரும் மழை பதிவாகியிருந்தது.

இந்த நிலையில் லட்சதீவு-குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

இதேபோல நாளையும் (சனிக்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com