

சென்னை,
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 நாட்க ளுக்கான வானிலை தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில் கூறப் பட்டு உள்ளதாவது:-தென்மேற்கு பருவமழை கேரளம் பகுதிகளில் அடுத்த 3 அல் லது 4 தினங்களில் தொடங்கக்கூடும். சுமார் 3.1 கி.மீ. முதல் 5.8 கி.மீ.உயரத்தில் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளம் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதையொட்டி இன்று (திங்கட்கி ழமை) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, திருப் பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப் பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (புதன்கி ழமை) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல வருகிற 6-ந் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.