சென்னை உட்பட 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.
சென்னை உட்பட 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதனை தொடர்ந்து,சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் தற்போது வரை விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com