6 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வட தமிழக கடற்கரையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவில் நிலைகொண்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, நாளை மறுநாள் நெல்லூர் அருகில் சென்று மீண்டும் வட தமிழகத்தை நோக்கி, 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நகர்ந்து வந்து 23, 24-ந்தேதிகளில் டெல்டா-வட இலங்கை வழியாக உள் மாவட்டங்களை கடந்து அரபிக்கடலுக்கு செல்ல இருக்கிறது. இப்படியாக போக்கு காட்டிச் செல்லும் இந்த நிகழ்வால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com