சென்னையில், இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் இன்று வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

சென்னை,

வடக்கு கடலோர தமிழகத்தில் இருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வருகிற 5-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

கோவை மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் இன்று வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com