சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
Published on: 

சென்னை,

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

குமரிக்கடல் பகுதிகளில் இருந்து தமிழகம் மற்றும் கேரளம் வழியாக தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில் மழை

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை பரவலாக மழை பெய்தது. அதன்படி, தேனாம்பேட்டை, நந்தனம், ஆழ்வார்பேட்டை, ஆயிரம் விளக்கு, கோவிலம்பாக்கம், குரோம்பேட்டை, எழும்பூர், கிண்டி, வேளச்சேரி உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

X