சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை

அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை
Published on: 

சென்னை,

சென்னையின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பாதை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில் மழை

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்டிரல், கோயம்பேடு, கொளத்தூர், மவுலிவாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.

மழை காரணமாக பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

X