சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
Published on: 

சென்னை,

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு 'முரசு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வங்கக்கடலில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தீவிர புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முரசு புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில் மழை

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை சென்டிரல், புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு, போரூர், ஆதம்பாக்கம், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், தி.நகர், சேப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

X