மே 1-ந் தேதி முதல் சென்னையில் வெயில் கொளுத்தும் - தனியார் வானிலை ஆய்வாளர்

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பொதுமக்கள் நீர்ச்சத்து மிகுந்த உணவு ஆகாரங்களை சாப்பிட்டு வருகின்றனர்.
மே 1-ந் தேதி முதல் சென்னையில் வெயில் கொளுத்தும் - தனியார் வானிலை ஆய்வாளர்
Published on

சென்னை,

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் காலம் வருகிற மே 4-ந்தேதி தொடங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது.

வெயிலின் தாக்கத்தின் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் உடல் நலம் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக ஏராளமான பொதுமக்கள் நீர்ச்சத்து மிகுந்த உணவு ஆகாரங்களை அதிக அளவில் சாப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மே 1-ந் தேதி முதல் சென்னையில் வெயில் கொளுத்தும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

“மே 1, 2-ந் தேதி முதல் உள்நாட்டு, தென் மற்றும் மேற்கு தமிழ்நாட்டில் மழை மீண்டும் தொடங்கினாலும், ஆந்திர எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளில் கடும் வெயிலின் தாக்கும் இருக்கும். சென்னை புறநகர் பகுதிகளில் வெப்பநிலை எளிதாக 40 டிகிரி செல்சியஸை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலூரில் ஏப்ரல் 7, 2026 அன்று பதிவான 42 டிகிரி செல்சியஸ் மீண்டும் எட்டப்படும் வாய்ப்பு உள்ளது.

ஆந்திராவுக்கு அருகிலுள்ள பகுதிகள் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படும். கடலோரத்தின் மிகவும் அருகிலுள்ள பகுதிகள் மட்டும் சற்றே தப்பிக்கலாம். சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள் மற்றும் வட தமிழ்நாடு மக்கள் மே 1/2 முதல் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நேரடி வெயிலில் செல்லாமல் இருக்கவும். எப்போதும் குடை மற்றும் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com