கரையைக் கடந்தது `அக்வான்' புயல்

புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70-80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.

கரையைக் கடந்தது `அக்வான்' புயல்
Published on: 

சென்னை,

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த `அக்வான்' புயல் ஒடிசாவின் கோபால்பூர் அருகே கரையைக் கடந்தது.

வங்கக்கடலில் கடந்த 15-ந்தேதி தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவான இந்த வானிலைச் சுழற்சி, 18-ந்தேதி தீவிர புயலாக வலுப்பெற்று அக்வான் என பெயர் பெற்றது. மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த அக்வான் புயல், நேற்று வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதிகளை நெருங்கியது.

இந்தநிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த `அக்வான்' புயல் ஒடிசாவின் கோபால்பூர் அருகே கரையைக் கடந்தது. வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் மணிக்கு 70-80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் முழுமையாகக் கரையைக் கடக்கும் நிகழ்வு மேலும் 2 மணி நேரம் நீடிக்கும். காற்றின் வேகம் அவ்வப்போது 90 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே 'அக்வான்' புயல் காரணமாக காலை முதல் ஒடிசாவில் புவனேஸ்வர் உட்பட பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

ஒடிசா மாநிலத்தில் 20 மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் மக்களை முன்னெச்சரிக்கையாக அபாயகர பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பலர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 423 மீட்புக் குழுக்களையும் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

X