அர்னாப் புயல் கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்

புயல் முன்கூட்டியே கரையை கடக்கத் தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அர்னாப் புயல் கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Published on: 

சென்னை,

ஆந்திராவின் பாபட்லா-விசாகப்பட்டினம் இடையே அர்னாப் புயல் மிக தீவிர புயலாக தற்போது கரையை கடக்கத் தொடங்கி உள்ளது.

அர்னாப் புயல்

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள அர்னாப் புயல், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை மிக தீவிர புயலாக மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையில் நகர அதிக வாய்ப்புள்ளது என்றும், அதன் பிறகு, மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா (Bapatla) மற்றும் விசாகப்பட்டினம் (Visakhapatnam) இடையே யானம் பகுதிகளுக்கு அருகில் மிக தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

முன்கூட்டியே கரையை கடக்கத் தொடங்கியது

இந்த நிலையில், நாளை முற்பகலில் கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட புயல் தற்போது முன்கூட்டியே கரையை கடக்கத் தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, அர்னாப் புயலின் வெளிச்சுற்று ஆந்திர பகுதியை தொட்டுவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆந்திராவின் பாபட்லா-விசாகப்பட்டினம் இடையே அர்னாப் புயல் மிக தீவிர புயலாக தற்போது கரையை கடக்கத் தொடங்கி உள்ளது.

சென்னையில் கடல் சீற்றம்

வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேற்கு-வடமேற்கு திசையில் புயல் நகர்கிறது. மேற்கு-வடமேற்கு திசையில் புயல் நகர்வதால் வடசென்னை மற்றும் திருவள்ளூர் கடற்பகுதி கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை புயல் கரையை கடந்துவிடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com