நவ.3-ம் தேதி கரையை கடக்கும் முரசு புயல்?

ஆந்திராவின் பாபட்லா-காவாலி இடையே ஓங்கால் அருகே நவ.3 அதிகாலை புயலாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


நவ.3-ம் தேதி கரையை கடக்கும் முரசு புயல்?
Published on: 

புதுடெல்லி,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் அர்னாப் புயல் உருவாகி ஆந்திரா நோக்கி சென்றதால் தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்தநிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் (நாளை) புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயலாக வலுப்பெறும் பட்சத்தில் இந்தியா பரிந்துரைத்த 'முரசு' என பெயரிடப்படும்.

நவ.3ஆம் தேதி கரையை கடக்கும் முரசு புயல்?

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறக் கூடும் அதனை தொடர்ந்து நாளை புயலாக வலுப்பெற்று தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் பாபட்லா-காவாலி இடையே ஓங்கால் அருகே நவ.3 அதிகாலை புயலாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் வங்கக்கடலில் உருவாகும் 2 ஆவது புயல் இதுவாகும்.

X