சென்னைக்கு மிக அருகில் முரசு புயல்... எங்கெல்லாம் மழை கொட்டப்போகிறது தெரியுமா.?

வங்கக்கடலில் உருவான முரசு புயல், தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
சென்னைக்கு மிக அருகில் முரசு புயல்... எங்கெல்லாம் மழை கொட்டப்போகிறது தெரியுமா.?
Published on: 

சென்னை,

சென்னைக்கு வடகிழக்கே வங்கக்கடலில் 260 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

முரசு பயல்

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ளது. முரசு என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், வங்கக்கடலில் வடமேற்கு திசையில் மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் சென்னைக்கு வடகிழக்கே வங்கக்கடலில் 260 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் இன்று அதிகாலையில் தீவிர புயலாக வலுவடைந்த முரசு, தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து கரையை கடக்க உள்ளது.

ஆரஞ்ச் அலர்ட்

இந்த நிலையில், முரசு புயல் எதிரொலியாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X