

சென்னை,
மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக (அர்னாப்) வலுப்பெற்றது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவுக்குள் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாகவும், நாளை (27-10-26) மிக தீவிர புயலாக அதே பகுதிகளில் வலுப்பெறக்கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஏனாம் (Yanam) கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா (Bapatla) மற்றும் விசாகப்பட்டினம் (Visakhapatnam) இடையே யானம் பகுதிகளுக்கு அருகில் மிக தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலால் தமிழகத்தில் நேரடி பாதிப்பு எதுவும் இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், புயல் உருவானதை குறிக்கும் வகையில் தமிழகம், புதுவை உட்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. அதாவது, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.